search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காக்கை யோகா"

    புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், காக்கை யோகா என்ற தலைப்பில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். தற்போது போராட்டம் மேலும் விரிவடைந்து நிலைமை மோசமாகி வரும் நிலையில், கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார்.

    இந்நிலையில் கவர்னர் கிரண் பேடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தர்ணா போராட்டம் தொடர்பாக ‘காக்கை தர்ணா’ என்ற பெயரில் புகைப்படங்களுடன் கருத்தை பதிவு செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கிறது. இதேபோல் மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த படங்களுடன் தனது கருத்தை கிரண் பேடி பதிவு செய்துள்ளார். அதில், ‘யோகா அனைவருக்கும் பொதுவானது. தர்ணா செய்வதும் யோகாதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக தர்ணா செய்கிறோம் என்பதைப் பொருத்து, அது என்ன ஆசனம் என்பதை கூற முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
    ×